சூப்பர் சுடோகு

சூப்பர் சுடோகு

Category: சுட்டிகளுக்காக
Author: கோ.கணேசன்
Book Code: 194
Availability:
Out of Stock
  Price: Rs. 45 ( India )
  Price: Rs. 103 ( Outside India )

விளையாட்டு என்பது பொழுதுபோக்குவதற்கு மட்டுமல்ல... உடலுக்கு பலம் தரும் உடற்பயிற்சிகள், மூளைக்கு பலம் தரும் உள்ளரங்கு விளையாட்டுகள் போன்றவற்றை பெரும்பாலும் சிறுவர் சிறுமியர் விளையாடியிருக்கலாம். எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதற்கான உபகரணங்கள் தேவை. அப்படி இல்லாமல், பேப்பரும் பென்சிலும் வைத்துக்கொண்டு கணக்குப் புதிர்கள் மூலம் நேரத்தை பயனுள்ள முறையில் போக்க ஒரு விளையாட்டு பிரபலமாகியுள்ளது. அதுதான் சுடோகு. மேஜிக் ஸ்கொயர் எனப்படும் மாயச் சதுரம், கணித ஆர்வமுள்ள மாணவர் உலகை ஆட்டிப்படைத்த காலம் போய், அதேமுறையில் கட்டங்களுக்குள் வரிசையாக எண்களை நிரப்பும் சுடோகு இப்போது மாணவர் உலகை அதிகமாக ஆக்கிரமித்துள்ளது எனலாம். ஒருவகையில் சினிமாப் பாடல்களைப் பாடி விளையாடும் அந்தாக்ஷரி மாதிரிதான் இதுவும். பாடிய பாடல் திரும்பவும் வரக்கூடாது, விட்ட இடத்திலிருந்து சங்கிலித் தொடர்போல் தொடரவேண்டும். இந்த விளையாட்டு போரடித்துவிட்டால் இனி நீங்கள் சுடோகுவுக்குத் தாவிவிடலாம். இது எண்களின் வரிசை விளையாட்டு. ஒரு வரிசையிலோ காலத்திலோ 1 முதல் 9 வரையுள்ள எண்கள் வரிசையாக வரவேண்டும், ஆனால் அவற்றில் எதுவும்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback