கிச்சன் கிளினிக்

கிச்சன் கிளினிக்

Category: சமையல்
Author: செஃப் ஜேக்கப்
Book Code: 568
Availability:
Out of Stock
  Price: Rs. 90 ( india )
  Price: Rs. 200 ( Outside India )

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.  ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது.  மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை! அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும்,  ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப். இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல். நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள்  சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர் முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர். ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback