களத்தில் கேப்டன்

களத்தில் கேப்டன்

Category: சமூக, அரசியல் கட்டுரைகள்
Book Code: 579
Availability:
Out of Stock
  Price: Rs. 95 ( india )
  Price: Rs. 245 ( Outside India )

களத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த்! ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அவ்வப்போது கொடுத்துவரும் மறைமுக சங்கடங்களைக் கண்டு அஞ்சாமல், நியாயம் என்று மனதில் படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க அரசியல்வாதி! தமிழ்நாட்டில், விஜயகாந்த் தலைமை ஏற்றிருக்கும் தே.மு.தி.க., குறுகிய காலத்தில் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால், அரசியல் நோக்கர்கள் இவருடைய அசைவுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருப்பது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. 2008_ல், விஜயகாந்த் கிராமம் கிராமமாக நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தபோது, அந்த அனுபவங்களை ஒவ்வோர் இதழிலும் ஆனந்த விகடன் பதிவு செய்தது. அந்தக் கட்டுரைகள்தான் ‘களத்தில் கேப்டன்’ என்ற பகுதியில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களுக்கு விஜயகாந்த் அவ்வப்போது அளித்த பிரத்தியேகப் பேட்டிகள் ‘கனல் தெறிக்கும் பேட்டிகள்!’ பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் மற்றும் வளர்ச்சியை இந்த நூல் நேர்த்தியாகப் படம்பிடித்துக் காண்பிக்கும்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback