விளம்பர உலகம்

விளம்பர உலகம்

Category: பொது
Author: எஸ்.எல்.வி.மூர்த்தி
Book Code: 724
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( India )
  Price: Rs. 200 ( Outside India )

விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback