மதன் ஜோக்ஸ் (பாகம் 2)

மதன் ஜோக்ஸ் (பாகம் 2)

Category: ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
Author: மத‌ன்
Book Code: 16
Availability:
Out of Stock
  Price: Rs. 60 ( India )
  Price: Rs. 160 ( Outside India )

ஆனந்த விகடன் வைர விழாவையொட்டி வெளியான 'மதன் ஜோக்ஸ்' புத்தகத்தை தமிழக வாசகர் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சிரித்து மகிழ்ந்தது! அதைத் தொடர்ந்து 'மதன் ஜோக்ஸ்_2' வெளியாகிறது. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு போன்ற மதனின் நகைச்சுவைப் படைப்புகளும் இந்த இரண்டாவது புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பு! மதன் படைத்த காரெக்டர்களான ரெட்டைவால் ரெங்குடுவின் விஷமம், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் பயம், வீட்டு புரோக்கர் புண்ணியகோடியின் சமாளிப்பு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவின் குறும்பு... இவை எளிதில் மனதைவிட்டு மறையுமா என்ன? 'மதன் ஜோக்ஸ்' அடங்கிய முதல் புத்தகத்தை தமிழக மக்கள் வரவேற்றதைப் போலவே, 'மதன் ஜோக்ஸ்_2' புத்தகமும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெறும் என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback