காமராஜர் ஒரு வழிகாட்டி

காமராஜர் ஒரு வழிகாட்டி

Category: வாழ்க்கை வரலாறு
Author: ஆலடி அருணா
Book Code: 1013
Availability:
Out of Stock
  Price: Rs. 265 ( India )
  Price: Rs. 565 ( Outside India )

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், 1964 அக்டோபரில் மூத்த தலைவர்களான அதுல்யா கோஷ், எஸ்.கே.படேல், சஞ்சீவி ரெட்டி, நிஜலிங்கப்பா ஆகியோரால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டிட் நேருவுக்குப் பிறகு நிலைகுலையும் என எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சியை, தன் சாமர்த்தியத்தால் ஜனநாயகப் பண்பால் நிலைநிறுத்தியவர். சனநாயகத்தை ஆளும் தேசிய உணர்வுமிக்க நாயகனாக தமிழகத்தை தன் எளிய நடையால் இனிய பேராற்றலால் திறம்பட ஆண்டு தூய்மையான அரசியல் நடத்தி, அரசியல் தலைவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மக்களுக்கு நன்மை செய்வதையே தன் லட்சியமாகக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் வாழ்க்கையை மாண்புடன் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஆலடி அருணா அவர்கள். சிறந்த தலைவர் மட்டும் அல்ல காமராஜர் அரசியலில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுத்து சரியான பதவியில் நிறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. கோபால கிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர் இடையே நடந்த காங்கிரஸ் மோதல். பண்டிட் நேரு, அண்ணல் காந்தி, சி.ஆர்.தாஸ் இடையே நடந்த கொள்கை மோதல், காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே இலட்சிய மோதல் போன்று அரசியலில் நடந்த பல மோதல்களுக்குப் பிறகு உக்கிரமான ஜனநாயகப் போர் காமராஜருக்கும் ராஜாஜிக்கும் நடந்தது. ராஜாஜி கொண்டுவந்த குலதர்மக் கல்வியை எதிர்த்துப் போராடியதிலும் சரி... காமராஜர் சற்றும் எதிர்பாராத முரண்பாடான இந்திராகாந்தியின் அரசியல் ஆட்சியிலும் சரி... கொஞ்சமும் அசராமல் அரசியல் நீதியை நுணுக்கங்களைக் கையாண்டு வெற்றிபெற்ற வெற்றித்தலைவரது அரசியல் வரலாற்றை நிகழ்வு பிறழாமல் சேர்த்து கோக்கப்பட்ட நூல் இது.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback