இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

Category: சட்டம்
Author: ஆலடி அருணா
Book Code: 1012
Availability:
Out of Stock
  Price: Rs. 250 ( India )
  Price: Rs. 480 ( Outside India )

இந்தியாவின் இறையாண்மை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். அதற்கு அடித்தளமாக இருப்பது அம்பேத்கர் போன்ற சான்றோர் பெருமக்கள் வகுத்த அரசியலமைப்புச் சட்டம்தான். இந்தியா மட்டுமல்ல ஜனநாயக நாடுகள் அனைத்துக்கும் அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே குடிமக்களின் சகல உரிமைகளுக்கும் அடிப்படை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரங்கள் என்னென்ன, மத்தியில் அமையும் அரசுகள் அந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு மாநில அரசுகளுக்குச் செய்யும் ஓரவஞ்சணை ஆகியவைப் பற்றி விளக்குகிறது இந்த நூல். இந்த நூலின் ஆசிரியர் ஆலடி அருணா சட்டம் படித்தவர் என்பதால், அரசியலமைப்பின் பிரிவுகளைப் பற்றி வாசகர்களுக்கு எளிய வகையில் புரியவைக்கிறார். ``இந்திய அரசியலமைப்பு, மத்திய அரசின் ஆதிக்க அரசியலை அனுமதிக்கிறது - அங்கீகரிக்கிறது என்பது உண்மை. எனவேதான் அரசியலமைப்பில் மாற்றம் தேவை. உண்மையான கூட்டாட்சி அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைத்தாலன்றி மத்திய மாநிலப் பிரச்னைகளுக்கு இந்தியாவில் நிரந்தரத் தீர்வு கிடைத்திடாது'' எனக்கூறும் நூலாசிரியர் அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார். மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இந்த நூல், என்றைக்கும் தேவையான ஒன்று!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback