நாற்பது திரைப்பட இயக்குனர்களும் நானும்

நாற்பது திரைப்பட இயக்குனர்களும் நானும்

Category: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
Author: கலை வித்தகர் ஆரூர்தாஸ்
Book Code: 272
Availability:
Out of Stock
  Price: Rs. 65 ( India )
  Price: Rs. 143 ( Outside India )

நடிப்பில் சிவாஜியும், பாடலில் கண்ணதாசனும், இசையில் எம்.எஸ்.வி.யும் கொடிகட்டிப் பறந்த காலத்தில், வசனத்தில் ஒலிவீசிப் பறந்தவர் ஆரூர்தாஸ். குடும்பப் பாங்கான படங்களுக்கு உணர்வுமயமான வசனங்களால் உயிர் கொடுத்தவர் இவர். தமிழ்த் திரையுலகின் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதியிருக்கிறார். இந்த நூலில், தான் பணியாற்றிய நாற்பது இயக்குனர்களுடனான தனது நினைவுகளை விரிவாக விவரித்துள்ளார் ஆரூர்தாஸ். தமிழ்த் திரையுலகில் என்றும் நீங்காத அளவில் தங்கள் பெயரைப் பதித்த இயக்குனர்களில் ஆரம்பித்து, ஓரிரு படங்கள் மட்டுமே இயக்கி தங்கள் முத்திரைகளைப் பதித்த இயக்குனர்கள் வரையிலான தனது அனுபவங்களை சுவைபடத் தொகுத்துள்ளார். திரைப்படங்களைப் பார்ப்பது எவ்வளவு உற்சாகத்தை மக்களுக்குத் தந்ததோ அதே அளவுக்கு அந்தத் திரைப்படங்களின் வசனங்களைக் கேட்பதும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வந்திருக்கிறது. வசனங்கள் மூலம் அன்றைய மக்களின் வாழ்க்கையை, மனநிலையைப் பதியவைத்த படங்கள் இன்றும் நம் மனத்தில் நீங்கா இடம்பிடித்துத் திகழ்வது சிறப்பானது. அதற்கு ஆரூர்தாஸ் போன்றவர்களின் வசனங்களும்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback