திக்கெட்டும் திருமுருகன்

திக்கெட்டும் திருமுருகன்

Category: ஆன்மிகம்
Author: பத்மன்
Book Code: 224
Availability:
Out of Stock
  Price: Rs. 70 ( India )
  Price: Rs. 220 ( Outside India )

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலைந்திடுமே _ தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றும் இந்தத் துதி, அவனுடைய பக்தகோடிகளால் உலகெலாம் துதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட குன்றக் கடவுள் முருகனின் அவதார மகிமையை இந்த நூல் சிறப்புற எடுத்துக் கூறுகிறது; பல புதிய சுவையான தகவல்களை அளிக்கிறது. அவசரகதியில் செல்லும் மனிதர்கள் தாம் தேடியவற்றில் வெற்றி அடைந்தாலும் ஒரு காலகட்டத்தில் பயம் கொண்டே ஆகவேண்டும். அதேசமயம் தோல்வியைத் தவிர வாழ்வில் ஏதும் கண்டறியாதவர்கள், ஒரு கட்டத்தில் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிடுவது இயல்பு. விரக்தியின் எல்லையிலும் தோன்றுவது பயமே. இனி என்ன செய்யப்போகிறேன், எப்படி வாழப் போகிறேன் என்ற பயம். அந்த நேரத்தில் யாமிருக்க பயம் ஏன்? என்று நாமிருக்கும் இடம் தேடி ஓடோடி வருபவன் கந்தன். யாமிருக்க விரக்தி ஏன் என்றோ, வேறு வேத வாக்கியங்களையோ அவன் உதிர்க்கவில்லை. வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் இறுதியில் அச்சம் தலைதூக்கி நிராயுதபாணியாக மனிதன் நிற்பான் என்று அந்த தண்டாயுதபாணி அறிவான். நம்முடைய சோதனையான காலத்தில் அவனை நாம் சென்று அடையவேண்டும் என்பதில்லை. குழப்பமான நிலையில் அ

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback