குரு தரிசனம்

குரு தரிசனம்

Category: ஆன்மிக வரலாறு
Author: பா.சு.ரமணன்
Book Code: 173
Availability:
Out of Stock
  Price: Rs. 50 ( India )
  Price: Rs. 150 ( Outside India )

தெய்வத் திருத்தலங்கள் நிறைந்த, தெய்வத் திருத் தொண்டர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் தோன்றி வாழ்ந்த தெய்வீக பூமி தமிழகம். தவயோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஆன்மிகச் சிந்தனையைப் பரப்பியதோடு, தம்மை நாடிவரும் அன்பர்களுக்கும், சீடர்களுக்கும் தமது தவயோக சக்தியால் மனக்குறை நீக்கி, உடல் பிணியும் நீங்கச் செய்துள்ளனர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக வாழ்ந்தும் காட்டியுள்ளனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் தாய் தந்தையர்க்கு அடுத்து குருவுக்கு சேவைகள் செய்து, உண்மையான சீடனின் கடமையைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு சந்நியாச தீட்சை பெற்று தெய்வீக நிலையை அடைந்தவர்களும் உண்டு. இளம் வயதிலேயே தெய்வீகப் பாதையில் ஈர்க்கப்பட்டு சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு. சம்சாரக் கடலில் வீழ்ந்து பிறகு தெய்வீக ஞானம் அடையப் பெற்று சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு. அத்தகைய தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், யோகிகளும் தம்மை நிந்தித்தவர்களுக்கும், தமக்குத் துன்பம் விளைவித்தவர்களுக்கும் கூட அருள் புரிந்துள்ளனர். இவர்கள் தங்களது தவயோகத்தால் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த போது

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback