கண்டேன் கயிலையான் பொற்பாதம்

கண்டேன் கயிலையான் பொற்பாதம்

தன்னுடைய அனுக்கிரஹம் எப்போதெல்லாம் மனிதர்களுக்குத் தேவைப்படும் என்பதை இறைவன் அறிவான். அவனுடைய ஒளிவட்டம் ஒருநாள் நம் ஆன்மாவையும் பிரகாசிக்க வைக்கும். அந்தத் திருநாளில் அவனுடைய மலரடிகளில் சரண் அடைகிற பாக்கியத்தைப் பெறவேண்டும். லௌகீக வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தானாகவே புரிந்துவிடும். இறை அனுபவம் அற்புதமானதோர் பேரானந்த நிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. பனியைப் போல், மழையைப் போல், ஆறு, ஏரி, நதிகளைப் போல் குளிர்ச்சியானது, பவித்ரமானது, தூய்மையானது இறை உணர்வு. அத்தகைய உணர்வைப் பெறவேண்டும் என எண்ணுகிற யாவருக்கும் கண்டேன் கயிலையான் பொற்பாதம்! என்கிற இந்தப் பயண நூல் ஒரு சிறந்த பரிசு! கயிலை மலையின் பிரம்மாண்ட தோற்றம், மலைகளுக்கு ஊடாக சில்லிட்டுக் கிடக்கும் ஏரிகளின் அழகு, மஞ்சள் வெயில் தலைகாட்டும் ஆனந்த கணங்கள், பனிமூடிக் கிடக்கும் குளிர்ச்சிப் பொழுதுகள், மழை சொரியும் அற்புத நேரங்கள், சித்திரங்களும் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்ட கோயில்கள், இறைவனை தரிசித்த, உணர்ந்த, மெய் சிலிர்த்த கணங்கள், வெவ்வேறு மனித மொழிகள், உறவுகள்... என்று சகலமும் நிறைந்திருக்கின்றன நூல் முழுவதும். சக்தி விகடன்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback