மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்

மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்

Category: ஆன்மிக வரலாறு
Author: காஷ்யபன்
Book Code: 575
Availability:
Out of Stock
  Price: Rs. 50 ( india )
  Price: Rs. 150 ( Outside India )

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்து, பக்தகோடிகளுக்கு அருள் பாலித்து, அவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்த மகான், ஸ்ரீ ராகவேந்திரர். திருமாலின் பரம பக்தரான சங்குகர்ணரின் நான்காவது அவதாரமாக பூவுலகில் தோன்றி, இல்லறத்தைத் துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டு அற்புதங்கள் பல நிகழ்த்திக் காட்டிய தவ முனிவர். மார்க்கங்கள் பல இருந்தாலும், அடைய வேண்டிய இலக்கு முக்தி ஒன்றுதான் என்ற ஒருமித்த கொள்கை கொண்ட இந்து மதம் அறிவுறுத்தும் வாழ்க்கை முறையை விதையாக ஊன்றிய துறவிகளில் ஒருவர் ஸ்ரீ ராகவேந்திரர். உயிர்களில் இல்லை ஏற்றத் தாழ்வு, மன்னிப்பதே பெருந்தன்மை, கல்வியும் பக்தியும்தான் வாழ்க்கை என்பன போன்ற உயர்ந்த பண்புகளோடு உதாரண புருஷராக வாழ்ந்து, பிருந்தாவன பிரவேசம் செய்து இன்றளவும் பக்தர்களுக்கு கருணை பொழிந்து வருகிறார் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத இவரது வாழ்க்கைக் கதையை எளிய தமிழில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் காஷ்யபன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கும் பெட்டிச் செய்தியில், பக்தர்களுக்கு ஏற்பட்ட பரவச அனுபவங்களை நூலாசிரியர் விவரித்துச் செல்வது கூடுதல் அழகு. துறவறத்தின் பொருளையும், மனமார வேண்டுபவருக்கு கிட்டும் இறைவனின் கருணை எத்தகையது என்பதையும் உணர்த்தும் நூல் இது. இந்த நூலினைப் படிக்கும் அனைவரும் மந்த்ராலய மகானின் அருளாசி கிடைக்கப் பெறுவார்கள் என்பது திண்ணம்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback