கனாக்கண்டேன் தோழி

கனாக்கண்டேன் தோழி

Category: ஆன்மிகம்
Author: முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார்
Book Code: 226
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( India )
  Price: Rs. 230 ( Outside India )

கர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே மீராவும், தெற்கே ஆண்டாளும் இந்த பக்தியை சின்னஞ்சிறார் உள்ளத்தே வித்தெனப் பதித்த வித்தகர்களாகத் திகழ்கிறார்கள். கண்ணனிடம் நாயக & நாயகி பாவத்தில் பக்தி செலுத்திய ஆண்டாள், மீரா ஆகியோரின் பக்திபூர்வமான பாடல்களை இன்றும் பக்தர்கள் பாடுகிறார்கள். கண்ணனிடம் மையல் கொண்டு, அவனையே மணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும்போல், அன்னை லட்சுமியே சீதையாகவும் ருக்மிணியாகவும் அவதாரம் செய்து ஸ்ரீமந் நாராயணன் கைத்தலம் பற்றியதை நாம் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பார்க்கிறோம். இந்தத் திருக்கல்யாண வைபவங்களை இன்றளவும் மனதால் நினைத்து, பக்தர்கள் இறை மூர்த்தங்களுக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி அழகு பார்க்கிறார்கள். இந்த வைபவம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன; எதற்காக இதை நடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்த நூலில் பதிலளித்திருக்கிறார் ஸ்ரீ முக்கூர். வ

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback