பூமியை பாதுகாப்போம்

பூமியை பாதுகாப்போம்

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: நடாலியா மார்ஷல்
Book Code: 576
Availability:
Out of Stock
  Price: Rs. 120 ( india )
  Price: Rs. 320 ( Outside India )

‘இன்றைய வாழ்க்கை முறையில், பசுமைச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியுமா?’ - இந்தக் கேள்வியோடுதான் துவங்க வேண்டியுள்ளது நம் அன்றாட வாழ்க்கையை! ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், பூமிக்கோளை நசுக்கிக் கொண்டிருக்கிறதா அல்லது ஊட்டமேற்றிக் கொண்டிருக்கிறதா..? என்று எடை போடத் துணியும்போதுதான், மேற்காணும் கேள்வி நமக்குள் எழுகிறது. பெரும்பாலும், மனிதர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக ஏற்படுத்திக் கொண்ட வசதிகளால் விளைந்த கசடுகள்தான் பூமியின் பரப்பையும், வான மண்டலத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. குளிர் சாதனம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், தரை விரிப்புகள், மரச்சாமான்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக், சாயக் கழிவுகள், காற்றை நறுமணமாக்கும் ஸ்ப்ரேக்கள், பூச்சி மருந்துகள் வெளியிடும் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் போன்றவையே ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கும் முக்கிய காரணிகள். ‘குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதலுக்கு உலகமே இன்று அடிமையாகி விட்டது! தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்குவதாலும், கரியமில வாயுவை வெளியிடக்கூடிய வாகனங்களில் பயணிப்பதாலும், மரங்களை வெட்டி, வீடுகள் கட்டும் பரப்பளவை அதிகரிப்பதாலும் இயற்கை வளங்களை நாம் அன்றாடம் சுரண்டி வருகிறோம். இவற்றைத் தவிர்த்து, பசுமைச் சூழல் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான 52 ஐடியாக்களை வாசகர்களின் மனதில் பதிய வைப்பதே இந்த நூலின் நோக்கம். ‘Save the Planet’ என்ற தலைப்பில், நடாலியா மார்ஷல் எழுதிய ஆங்கில நூலை, எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.என்.ஸ்ரீனிவாஸ். ஒவ்வொரு அத்தியாத்திலும் உள்ள ‘யோசனை மூலை’, ‘அப்படியா!’, ‘சந்தேகப் பெட்டி’ போன்ற அம்சங்கள், பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கும் _ சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சிறந்த பலனைத் தரும்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback