ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Category: ஆன்மிக வரலாறு
Author: பா.சு.ரமணன்
Book Code: 227
Availability:
Out of Stock

பகவான் அவ்வப்போது நமக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவதாரம் எடுக்கிறார்; அல்லது, குருமாராகத் தோன்றி நம்மைக் கடைத்தேற்றுகிறார். இது அவருடைய லீலை. குருவிடம் சரணடைந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கவேண்டும்; ஏனென்றால் குரு நமக்குப் பரிச்சயமானவர்; நம்முடனேயே இருந்து நம்மைத் திருத்திப் பண்படுத்துபவர். நமக்கு நன்கு பழக்கமான அப்படிப்பட்ட ஒரு குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமூட்டுவதும் பற்பல உணர்ச்சிகளின் கோவையுமான சம்பவங்களை இந்நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பா.சு.ரமணன். சாதாரண மனிதராகப் பிறந்து உலகம் போற்றும் உத்தமராக, குருவாக மாறிய அவருடைய வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது. அவருடைய உபதேசங்கள் நம்முடனேயே வாழ்பவர் ஒருவர் சொல்வதைப்போல, அவ்வளவு அன்யோன்யமாக இருக்கின்றன; ஆகவே கடைப்பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன. குட்டிக்குட்டிக் கதைகளின் மூலமாக ஆழ்ந்த உபதேசங்களைக் கொடுக்கிறார் பரமஹம்சர். அதுவும், சூரணத்தில் தேனைத் தடவி குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல அல்லாமல், ஒரு விஷயத்தை உள்வாங்கிக்கொள்வதில் சிரமப்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback