புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: ராஷ்மி பன்சால்
Book Code: 582
Availability:
Out of Stock
  Price: Rs. 175 ( india )
  Price: Rs. 490 ( Outside India )

எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் சாதனை படைக்கக் கனவு கண்டு, அந்தக் கனவுகளை மெய்ப்பட வைத்து ‘தொழிலதிபர்களாக’ சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் 20 பேரின் வெற்றிக் கதைகளை இப்போது இந்த நூலில் தொகுத்துள்ளார் ராஷ்மி பன்சால். ‘Connect the Dots’ என்ற தலைப்பில் இவர் எழுதிப் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. ‘ஹாட் பிரெட்ஸ்’ மகாதேவன், ‘VETA’ கணேஷ்ராம் போன்றவர்கள் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து இன்னல்கள் பல கடந்து, படிப்படியாக தொழிலில் முன்னேறி, உச்சம் தொட்ட கதைகளை இந்த நூலில் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படும். அதேபோல், ‘தோசா பிளாஸா’ பிரேம் கணபதி, ‘கிராஸ்வேர்டு’ ஸ்ரீராம், ‘பிரின்ஸ் நாட்டியக் குழு’ கிருஷ்ணா ரெட்டி போன்றவர்கள் ஆர்வத்துடனும், விடா முயற்சியுடனும் ‘வளர்ந்த கதை’ வியக்க வைக்கும்! இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தொழிலதிபரின் வாழ்க்கையும் புள்ளியில் தொடங்கி, கோடுகளாக நீண்டு, பாதைகளாக செப்பனிடப்பட்டிருக்கும் வெற்றிக் கதைகள். இவற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும், ‘பெரிய படிப்பு எதுவும் இல்லையே!’ என்ற கவலையின்றி, தனக்கு விருப்பமான துறையில் கால் பதித்து வரலாறு படைக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வுடன் சிலிர்த்து எழுவது நிச்சயம்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback