வார்த்தையே வெல்லும்!

வார்த்தையே வெல்லும்!

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: டி.பி.ஸ்ரீனிவாசன்
Book Code: 589
Availability:
Out of Stock
  Price: Rs. 105 ( india )
  Price: Rs. 275 ( Outside India )

இது ‘விக்கிலீக்ஸ்’ யுகம்! வெளியுறவு, தூதரகம், தூதரக உறவு, தூதரக அதிகாரி... எல்லாமே சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் வந்து விட்டன. இந்தியத் தூதரகமும், தூதரக அதிகாரிகளும் உலக அரசியல் அரங்கில் முக்கிய பங்கு வகிப்பதை அனைவருமே தெரிந்துவைத்து இருக்கிறார்கள். நூலாசிரியர் டி.பி.ஸ்ரீனிவாசன், இந்திய வெளியுறவுத் துறையில் பணி புரிந்து பழுத்த அனுபவம் பெற்றவர். உலகில் பல்வேறு நாடுகளில் முக்கிய பதவி வகித்தவர். பணியில் சேர்ந்தது முதல், ஓய்வு பெற்றது வரை, பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களை இந்த நூலில் தன்னுடைய நினைவு நாடாக்களாக விறுவிறுப்பாக சுழலவிட்டு இருக்கிறார்! முதன்முதலில் இந்தியா அணு ஆயுதப் பரிசோதனையில் இறங்கியபோது, அது அமெரிக்காவில் ஏற்படுத்திய பாதிப்பை நேரில் அனுபவித்தவர் என்ற முறையில் டி.பி.ஸ்ரீனிவாசனின் பார்வை ஒவ்வொன்றும் முக்கியமான வரலாற்றுப் பதிவு. அதே மாதிரி, ஃபிஜி தீவுகளில் புரட்சி வெடித்த சமயத்தில் நேரடி சாட்சியாக சந்தித்த அனுபவங்களை நூலாசிரியர் படம் பிடித்துக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம், ஒரு மர்ம நாவலுக்கு இணையானது! ‘Words, Words, Words’ என்ற தலைப்பில் பியர்சன் வெளியிட்டு உள்ள இந்த நூலை ஆழ்ந்து படித்து, புரிந்துகொண்டு அழகானத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் எஸ்.சரவணன். ஐ.எஃப்.எஸ். கனவில் இருக்கும் இளைஞர்களுக்கும், பல்வேறு நாடுகளில் நமது தூதரக செயல்களை அறிந்து கொள்ள முனையும் அரசியல் நிர்வாக ஆர்வலர்களுக்கும் இந்த நூல் மிகமிகப் பயனுள்ளதாக இருக்கும்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback