யார் கட்டுவது பூனைக்கு மணி?

யார் கட்டுவது பூனைக்கு மணி?

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: முஹித் சித்தீக்கி
Book Code: 586
Availability:
Out of Stock
  Price: Rs. 90 ( india )
  Price: Rs. 240 ( Outside India )

எலிகள் ஒன்றுகூடி, பூனைக்கு மணி கட்டத் திட்டமிடும் எளிமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாக செயல்திட்டங்களுடன் அதைத் தொடர்புபடுத்தி, பூனைக்கு யார் மணி கட்டுவது... எப்படி மணி கட்டுவது... நிஜமாகவே பூனைக்கு மணி கட்டியாகி விட்டதா என்பதை விளக்கும்விதமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நிறுவனங்களில் செயல்திட்டங்களை வகுக்கும்போது ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த நூல் தீர்வு சொல்கிறது. வகுக்கப்படும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நிர்வாக இயலில் நிபுணரான நூலாசிரியர் முஹித் சித்தீக்கி, பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணி புரிந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். ஒரு நிறுவனத்தின் செயல்திட்டங்கள் வகுக்கப்படுவதற்குத் தேவையான வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர். தகுதியான நபர்களைப் பணியில் அமர்த்துவது... பணியாளர்களுக்கு பொறுப்புகளைப் பகிர்ந்து அளிப்பது... நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பவர்கள், ஒரு போர்வீரனாக களத்தில் நின்று, யூகங்கள் வகுத்து, வெற்றிவாகை சூடுவது... இவை எல்லாவற்றுக்குமே இந்த நூலில் யோசனைகளும், தீர்வுகளும் விரவிக் கிடக்கின்றன. ‘Who Will Bell the Cat’ என்ற தலைப்பில் முஹித் சித்தீக்கி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலுக்கு எளிமையான தமிழ் வடிவம் கொடுத்திருக்கிறார் ந.வினோத்குமார். சொந்தமாக தொழில் தொடங்க முனையும் இளைஞர்களுக்கும், மேலாண்மை உயர் அதிகாரிகளுக்கும் இந்த நூல் ஒரு மானேஜ்மென்ட் குரு!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback