பேசும் அரங்கன்

பேசும் அரங்கன்

Category: ஆன்மிகம்
Author: ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்
Book Code: 551
Availability:
Out of Stock
  Price: Rs. 110 ( india )
  Price: Rs. 230 ( Outside India )

அகிலத்து உயிர்களை அன்பெனும் அயனத்தில் அழைத்துச் செல்பவன், அரங்கன். சூட்சும உலகின் சூத்திரதாரியாக விளங்கும் அரங்கனின் திருவிளையாடல்கள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘அரங்கனோடு அரங்கேறும் ஆனந்தமான அனுபவம் நமக்கு எப்போது ஏற்படும்? அரங்கனின் அருட்பிரகாசம் நம்முடைய அகக்கண்களுக்கு எப்போது கிட்டும்? நமது சரீரம் அவன் திருவடியில் சேரும் நாள் எந்நாளோ?’ என்று ஏங்கும் உள்ளங்கள் அநேகம். இந்தப் பிறவியில், நமக்காக, நம்மோடு பேசும் உயிர்களைக் காண்பது அரிது. ஆனால், உள்ளம் உருக பக்தியும், கபடமில்லா அன்பையும் அரங்கன்பால் செலுத்தினால், அவன் நமக்காக பேசுவது மட்டுமல்லாமல், அத்தனை செயல்களிலும் அவனே உடனிருந்து, நம்மை முதல்வனாக்குவான். அரங்கன், அடியார்களை ஆட்கொண்ட விதத்தையும், ராமானுஜர், கூரத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார்... போன்ற பல்வேறு ஆன்மிகத் தொண்டர்களின் மெய் சிலிர்த்த அனுபவங்களையும், வைணவம் தழைத்தோங்க அந்த ராமப்பிரியன் செய்த சிறப்புகளையும் பக்தி ரசத்தோடு ‘சக்தி விகடன்’ இதழ்களில் ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஆழ்வார்கள், ஆசார்யர்கள் என்றில்லாமல் சாதாரண மனிதர்களிடமும் அரங்கன் பேசி உறவாடும் நிகழ்வுகளைப் படிக்கும்போது, நமக்குள் இருக்கும் ஆன்மிக உணர்வு ஆலமரமாக தழைப்பதையும், நற்சிந்தனைகள் சிறப்பதையும், வாழ்வில் வளத்துடன்கூடிய நலம் பெருவோம் என்ற நம்பிக்கையையும் உணர்வோம்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback