எட்டு சக்தி உங்களுக்குள்

எட்டு சக்தி உங்களுக்குள்

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா
Book Code: 549
Availability:
Out of Stock
  Price: Rs. 85 ( india )
  Price: Rs. 205 ( Outside India )

வாழ்க்கையின் ஒருபுறம் நீங்கள் இருக்கிறீர்கள். மறுபுறம் வெற்றி இருக்கிறது. இரண்டுக்கும் இடையே இடைவெளி. இதைக் குறைப்பது எப்படி? கடுமையான உழைப்பு தேவையா? அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை நம் பக்கம் திரும்ப வேண்டுமா? இதற்கான விடையைத் தேடி வெளியே எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் எட்டு சக்திகளின் துணையோடு உங்கள் இலக்கை நோக்கிப் பயணித்து வெற்றி அடையலாம் என்பதை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். முதலில், ‘கற்பனை’ செய்ய வேண்டும். அடுத்து, அதற்கு ‘சொல்’லால் ஒரு வடிவம் கொடுக்க வேண்டும். பிறகு, ‘தன்னம்பிக்கை’ உள்ள திட்டம் மட்டும் உறுதி பெறும். வடிவமும், கால நேரமும் கொண்ட ஒரு ‘குறிக்கோ’ளைத் தீர்மானித்த பிறகு, இலக்கை அடைய மனதை ‘ஒருமுகப்படுத்த’ வேண்டும். அதன்பின், ‘மனோதிட’த்தை ஏற்படுத்திக் கொண்டு, ‘செய’லில் இறங்க வேண்டும். இவை அனைத்தையும் ‘அன்பு’டன் செய்தால்தான் வெற்றி பெற்றவுடன் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். _ இப்படி எட்டு சக்திகளைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, வளமாக வாழ்வது எப்படி என்பதை அருமையாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது இந்த நூல். ‘THE EIGHT POWERS WITHIN YOU’ என்ற தலைப்பில் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலின் தமிழ் வடிவமான இந்த நூல், நேர்மறை எண்ணங்களை நம்முள் விதைத்து, போட்டிகள் நிறைந்த இந்த உலகில், ‘விக்டரி ஸ்டாண்ட்’ நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback