தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: சி.சரவணன்
Book Code: 596
Availability:
Out of Stock
  Price: Rs. 90 ( india )
  Price: Rs. 240 ( Outside India )

‘ஆறிலிருந்து அறுபது வரை’ அனைத்து பெண்மணிகளும் விரும்புவது தங்க ஆபரணங்கள் என்றால் மிகை இல்லை. அதேசமயம், மகளுக்குக் கல்யாணம், உறவினர் வீட்டுக்குச் செய்முறை, நேர்த்திக்கடன் போன்ற சமயங்களில் நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் மிகப் பெரிய விஷயம், தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வுதான்! ‘இந்த விலை உயர்வு எங்கே போய் நிற்குமோ?’ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் அலைபாய்கிறது. பல குடும்பங்களில், ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்க உதவுவதும், வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி வரும் சமயங்களில், குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கம்தான். தங்கநகை சேமிப்பு என்பது நமது பாரம்பரியப் பழக்கம்தான். 2010_ம் ஆண்டில் மட்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இன்றைய நிலையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் வருமானம் என்பது நிலையானதாக இல்லை என்பதால் பெரும்பாலோர் விரும்பும் ஒரே முதலீடு தங்கம்தான். தங்க முதலீட்டை லாபகரமாகச் செய்வது, அதற்கான வழி முறைகள், தங்கநகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைகள்... போன்ற விவரங்களை, துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு, அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். இந்த நூலைப் படித்துவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து லாபம் அடையலாம் என்பதை நிச்சயம் உணர்வீர்கள்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback