ஐம்பது-50 கல்யாணம்

ஐம்பது-50 கல்யாணம்

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: விஜய் நாகஸ்வாமி
Book Code: 610
Availability:
Out of Stock
  Price: Rs. 100 ( india )
  Price: Rs. 270 ( Outside India )

திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். அந்தத் திருமண வாழ்க்கை, மென்மையாகவும் மேன்மையாகவும், நெடுங்காலம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால், ஆண், பெண் இருவருமே சரிசமமான பொறுப்பாளிகள் என்பதை முதலில் உணர வேண்டும். திருமண பந்தத்தால் உருவாகும் கணவன்-மனைவி என்ற பிணைப்பு அமைதியான நீரோடையாக அமைய வேண்டுமானால், அதை நிச்சயிக்க வேண்டியது இருவரின் மனங்கள்தான். அதில் இருவருக்கும் ஐம்பதுக்கு-50 பங்கு உண்டு. திருமண வாழ்க்கை என்பது, அன்பால் கட்டுண்டவர்களின் கூட்டுமுயற்சி, பரஸ்பர இணக்கம் சம்பந்தப்பட்டது. கூட்டு முயற்சியின் நோக்கமே, ஜோடிகளின் திறமைகளை அதிகப்படுத்துவதுதான். திருமண வாழ்வில் பிரச்னைகளானாலும், சந்தோஷ தருணங்களானாலும் கணவன்-மனைவி இருவருமே அவற்றை உணர்வுபூர்வமாகவும், வெளிப்படையாகவும் கலந்தாலோசித்து, அவரவருக்கான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு, திருமண வாழ்க்கையை நீடித்து நிலைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை உணர்த்துவதே இந்த நூலின் தனிச் சிறப்பு. காதல், நெருக்கம், திருமண வாழ்க்கை, தம்பதிகளின் அந்தரங்கமான சிக்கல்கள், தீர்வு தேடும் வழிமுறைகள் என, செரிவான விஷயங்களுடன் விஜய் நாகஸ்வாமி எழுதிய ‘Fifty -50 Marriage’ என்ற ஆங்கில நூலை, தெளிவாகவும், சுலபமாகப் புரியும் வகையிலும் சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் வீயெஸ்வி. பலதரப்பட்ட திருமணங்கள், அவை சார்ந்த பிரச்னைகள், சீர்படுத்தும் பொறுப்பு... என பல விஷயங்களை விளக்கும் இந்த நூல், அனைவரது திருமண வாழ்விலும் வசந்தம் மலர இனிமையான வழிகளைக் காட்டும் என்று நம்புகிறேன்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback