போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?

“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback