அறிவியல்

அறிவியல்

“அரசுப் பணியையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட இளைய தலைமுறையினர், மிகுந்த தேடுதலோடும் விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். தேர்வு ஆணையத் தேர்வுகள் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி மிகுந்த கவனத்தோடு நடத்தப்படுவதால், உரிய முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணி நிச்சயம் உங்கள் கைவசமாகும்!” & தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் வார்த்திருக்கும் நம்பிக்கை இது. பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. அரசுப் பணியை லட்சியக் கனவாகக் கொண்ட இளைய தலைமுறையினர் போட்டித் தேர்வுகளில் வெல்வதற்காக பலவிதங்களிலும் போராடுகிறார்கள். விதவிதமான பயிற்சிப் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கிறார்கள். ஆனாலும், ‘‘நாங்கள் படித்த புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன... அதனால், தேர்வை சரியாக எழுத முடியவில்லை!” என ஏமாற்றத்தோடு பலரும் வேதனைப்படுகிறார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக சரியான திட்டமிடலே முக்கியம். எல்லாவற்றையும் கற்றறிவது நல்லதுதான். ஆனாலும், போட்டித் தேர்வுகளில் எத்தகைய கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் எவை, கேட்பதற்கான சாத்தியம் மிகுந்த கேள்விகள் எவை, தேர்வுக் குழுவால் கவனிக்கப்படும் விஷயங்கள் எவை, எத்தகைய பாடங்களில் இருந்து தேர்வுக் குழு அதிகக் கேள்விகளைத் தேர்ந்தெடுக்கிறது என்ற விவரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, அதன்படியான தேடுதலோடு படிப்பதே போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சரியான அணுகுமுறையாக இருக்கும். சமீபத்திய போட்டித் தேர்வுகள் பலவற்றையும் கூர்ந்து பார்க்கையில் அரசுப் பாடத் திட்டங்களில் இருந்தே அதிகக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக 6&ம் வகுப்பில் இருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் தேர்வுகளிலும் பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அரசுத் தேர்வு ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தின் அத்தனை விதமான கேள்வி வாய்ப்புகளையும் கண்டறிந்து அதன் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. அறிவியல் பிரிவில் பாடவாரியாகக் கேள்விகளை மிக எளிதாகப் பிரித்துக் கொடுத்து, அதற்கான பதில்களையும் தொகுத்திருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. ஒரே விஷயத்தை எப்படி எல்லாம் விதவிதமாக மாற்றி கேள்வியாக்குவார்கள் என்பதையும் உதாரண வடிவில் இந்த நூல் விளக்குகிறது. தேர்வு நுட்பம் அறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா & விடைகளும், பயிற்சித்தாள்களும் கொண்ட இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO உள்ளிட்ட எல்லாவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback