தோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)

தோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)

Category: கதைகள், கவிதைகள்
Author: இரா.வினோத்
Book Code:
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( india )
  Price: Rs. 200 ( outside india )

‘‘பாப்லோ நெருடாவின் ‘காண்டே ஜெனரல்’ போல ஒரு வரலாற்றுக் காவியமாக வடிவம் கொள்ள வேண்டிய ஓர் ஆலவித்து இதன் கரு.. இரா.வினோத் என்ற இளம்படைப்பாளியின் மானுட நேயம் ஒரு கவிதை கோலம் கொள்கிற நிகழ்வை நீங்கள் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள்!’’ - கவிஞர் இன்குலாப், ஊரப்பாக்கம் ‘‘தோட்டக்காட்டீ’யை வாசிக்கும் ஒருவர் இலங்கை மலையக மக்களின் வரலாற்றினையும், இன்றைய யதார்த்ததினையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். மலையகத் தமிழர் குறித்துக் கவிதை வடிவில் வெளிவந்திருக்கும் முதல் வரலாற்று ஆவணம் என்றும் குறிப்பிடலாம். இந்நூல் சிறுசிறு கவிதைகளைக் கொண்டிருந்தாலும் இலங்கை மலையக மக்களின் வரலாற்றினை உள்ளடக்கிய சிறுகாவியமாகத் திகழ்கின்றது!’’ -எழுத்தாளர் பொ.முத்துலிங்கம், இலங்கை “மலையகத் தமிழர்கள் பற்றிய அலட்சிய மனப்பான்மை மட்டுமின்றி அவர்களை இழிசனங்களாகப் பார்க்கும் தமிழ் தேசியவாதிகள் பலரிடையேயும், வடகிழக்கு மாகாணத தமிழர்களிடையேயும் பரவலாக இருந்ததை எடுத்துரைக்கின்றன, எனினும், ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக் கொலைகளையும் கவிஞர் கருத்தில் கொள்ளாமல் இல்லை. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் போல இந்தக் கவிதைகளை ‘லயத்துப்பால்’ என வகைப்படுத்துவது மிகச் சரியானதே!’’ - எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை, கோத்தகிரி

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback