டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு

டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாடத்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்குகளை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback