கல்வியியல் கையேடு

கல்வியியல் கையேடு

கல்வி மனித அறிவு வளர்ச்சியின் வித்து. எளிமை, கடினம், பொருள், கருத்து, விளக்கம், உரை, பாடல், கேள்வி ஆகிய பல நுண் கூறுகளைக் கொண்டது. இவையே தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்புகளை வரை நினைவாற்றல், அறிவாற்றல், செயல்திறன், பகுத்தறிவு, ஆளுமை போன்ற தனித்திறன் வெளிப்படுத்தும் நுண்ணறிவைக் கொடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான பல வழிகாட்டி நூல்களை விகடன் பிரசுரம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை கல்வி தொடர்பாக - கல்வி சார்ந்த பல நூல்கள் வெளிவந்து கல்வியின் வளர்ச்சிக்கு உரமாகியிருக்கின்றன. அதன் வரிசையில், TRB, SERT, TET, NET, SLET ஆகிய போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு உற்ற வழிகாட்டியாக வெளிவந்திருக்கிறது இந்த ‘கல்வியியல் கையேடு’ நூல். மேற்கண்ட தேர்வுகளை எழுதுவோருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடியதாக இந்த நூல் விளங்கும். மேலும், B.Ed., M.Ed., கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் உபயோகப்படும் விதத்தில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இதனோடு பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளையும், கல்வி பற்றிய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், கல்வி சார்ந்த வாழ்வியல் விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டு களஞ்சிய தொகுப்பாக அமைக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். நீங்கள் தெரிவு செய்து எழுதும் தேர்வுகளில் வெற்றியடையும் உத்தி இதனுள் கொட்டிக்கிடக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback