விகடன் இயர் புக் 2019

விகடன் இயர் புக் 2019

ஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினருக்கும் பல வகையில் பயன்தரத்தக்க வகையில் உருவாக்கப்படுகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் ‘விகடன் இயர் புக் 2019’ அரிய தகவல்களைத் தரும் அறிவுப் பெட்டகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர், அறிவுத் தேடல் கொண்டோர் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான புத்தகமாகத் திகழ்கிறது விகடன் இயர் புக்! மகாத்மா-150, காந்தியை உணர்ந்துகொள்ள சில நூல்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள்-2018, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர்கள், சாதனைப் பெண்கள், அமைப்புகளும் அறிக்கைகளும், சின்ன C-ல் நூறு வார்த்தைகள் பெரிய C-ல் நூறு வார்த்தைகள், `நவீன தமிழகத்தின் சிற்பி’ கலைஞர் மு.கருணாநிதி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, அமெரிக்கா - சீனா பொருளாதார போர், வனவழி நோய்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், பிட்காய்னும் சர்ச்சைகளும், ஒளிக்கத்திகள், தகவல் நெடுஞ்சாலை, முன்னுக்கு வரும் மின் வாகனம், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... இப்படி பல அரிய தகவல்களை உங்களுக்குத் தரப்போகிறது விகடன் இயர் புக்-2019. மேலும் நடப்பு நிகழ்வுகள், விளையாட்டுத் துறை விருது விவரங்கள், சாதனையாளர்கள், UPSC தேர்வர்களின் அனுபவங்கள், பயிற்றுநர்களின் அனுபவப் பகிர்வுகள், 2018-ல் நோபல் பரிசு வென்றவர்கள், வாழ்வுக்கு வழிகாட்டும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள், காட்சிப் பிழையாக மாறிய எழுத்தாளன் மண்ட்டோ... என இதில் இல்லாதது எதுவும் இல்லை என வியக்கும் அளவுக்கு அறிவுசார் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உங்களின் வெற்றிக்கும் பொது அறிவு மெருகூட்டலுக்கும் விகடன் இயர் புக் வெளிச்சம் பாய்ச்சும்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback