சிகரங்கள் நமக்காக

சிகரங்கள் நமக்காக

Category: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்
Author: வழக்கறிஞர் த.இராமலிங்கம்
Book Code: 64
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( India )
  Price: Rs. 150 ( Outside India )

உழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக!' 'இன்றைய இளைஞர்கள் விதைநெல் போன்றவர்கள்' என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி எழுதியிருக்கும் வழக்கறிஞர் த.இராமலிங்கம், சாதனை படைத்த பெருமக்களையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். நமது நாட்டுக்கு பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் பதவியை ஒளிவீசச் செய்தவர்களும் சரி... நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி, தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி பதவி உயர்வு பெற்றவர்களும் சரி... அந்த சாதனைக்காக எந்தளவு சீரிய சிந்தனையும் உயர்ந்த மதிநுட்பமும் செலவிட்டார்கள் என்பதைப் பொருத்தமான இடங்களில் உதாரணம் காட்டி ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிளிரச் செய்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். இனிய தமிழில், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்தப் புதிய சுயமுன்னேற்ற கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback