கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)

Category: ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
Author: கோபுலு
Book Code: 74
Availability:
Out of Stock
  Price: Rs. 65 ( India )
  Price: Rs. 185 ( Outside India )

ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்கள் பல கடந்தாலும், விகடன் இதழ்களை எப்போது புரட்டினாலும் கோபுலுவின் ஓவியங்கள் ஹாஸ்யக் கருவூலமாக நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அமரர் தேவனின் நாவல்களுக்கு உயிரோவியம் படைத்ததில்... 'தில்லானா மோகனாம்பா'ளை தத்ரூபமாகக் கண்முன்னே ஆடவிட்டதில்... 'வாஷிங்டனில் திருமணம்' தொடருக்கு காரிகேச்சர்களை உருவாக்கியதில்... கோபுலுவின் உழைப்பு மின்னலடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 18 வருடங்கள் விகடனின் பொருளடக்கப் பகுதியில், தனக்கே உரிய ஹாஸ்ய உணர்வோடு 'மௌன ஜோக்'குகளை வரைந்து, வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் கோபுலு. அந்த 'ஜோக்' கடலிலிருந்து ஒரு கையளவு மட்டுமே எடுத்துத் தொகுத்து, வாசகர்களுக்குப் புத்தகமாக அளிப்பதில் பெருமை அடைகிறேன். கோபுலு

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback