கிருஷ்ண விஜயம் (பாகம் 1)

கிருஷ்ண விஜயம் (பாகம் 1)

Category: ஆன்மிகம்
Author: கவிஞர் வாலி
Book Code: 120
Availability:
Out of Stock
  Price: Rs. 110 ( India )
  Price: Rs. 310 ( Outside India )

நமது பாரத நாட்டின் பொக்கிஷங்களான இதிகாசங்களும் புராணங்களும் காலக் கண்ணாடியாக நின்று, மனித வாழ்க்கைக்கான நியதிகளையும் பாதைகளையும் வகுத்துத் தருகின்றன. இந்திய பாரம்பரிய தத்துவங்கள் மட்டுமின்றி, இலக்கியச் சுவையுடன் கூடிய சுவாரசியமான சம்பவங்களும் புதைந்து காணப்படுவதுதான் அவற்றின் சிறப்புக்கு முக்கிய காரணம். இத்தகைய சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள காவியங்களில் ஒன்றான மகாபாரதத்தில், உள்ளம் கொள்ளை கொள்ளும் வல்லமையுடன் திகழ்பவன் கண்ணபிரான். அந்தக் காவிய நாயகனை அனைவரின் கண்முன்னே மீண்டும் விஜயம் செய்விப்பதற்காக படைக்கப்பட்டதே 'கிருஷ்ண விஜயம்.' தமிழ் சினிமாவின் கவிதை உலகில் மார்க்கண்டேயராக வலம் வரும் கவிஞர் வாலி, தனக்கே உரிய பாணியில், அனைவரும் இலக்கியத்தின் இன்பத்தை சுவைக்கும் வகையில் இக்காவியத்தைப் படைத்துள்ளார். அவரது கணக்கிலடங்கா எதுகை, மோனைகள் அனைத்தும் வாய்விட்டுப் படிப்பவர்களின் நாவுக்கு அமுது படைக்கிறது. கவிஞர் வாலியின் சொற்களஞ்சியமாகத் திகழும் கிருஷ்ண விஜயம், அவரை இலக்கிய புலமைமிக்கவராக நம் மனங்களில் உயர்த்திப் பிடிக்கிறது. 'காவியம் படைத்த பின் ஓவியம் தீட்டப்பட்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback