சிக்குன் குன்யா

சிக்குன் குன்யா

சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போலவே மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன சில நோய்கள். மலேரியா, காலரா, டெங்கு... என வெவ்வேறு நோய்கள், அவ்வப்போது பருவகாலத்துக்கு ஏற்றாற்போல் பலரையும் ஆட்டுவிக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி, மேலும் சில இந்திய மாநிலங்களையும் வெகுவாக உலுக்கி எடுத்துக்கொண்டு இருக்கிறது 'சிக்குன் குன்யா' நோய். நம் நாட்டில் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எவ்வித பாகுபாடுமின்றி, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது, 'சிக்குன் குன்யா'. இந்நோய் தாக்குவதற்கான காரணம், நோய்க்கான அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அறிவதற்கு முன்னரே, பலர் 'சிக்குன் குன்யா' என்ற பெயரைக் கேட்டவுடன் திகிலடைந்துவிடுகின்றனர். இந்நோய் குறித்த விழிப்பு உணர்வு முன்கூட்டியே இருந்திருந்தால், வீண்பயத்துக்கு அவசியமே இல்லை. சிக்குன் குன்யா குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும், மக்களிடையே நிலவிவரும் தேவையற்ற அச்சத்தை களைவதும்தான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்த நோய் தோன்றிய வரலாறு முதல் நோய் வராமல் தட

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback