இசையுலக இளவரசர் ஜி.என்.பி.

இசையுலக இளவரசர் ஜி.என்.பி.

Category: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
Author: லலிதா ராம்
Book Code: 139
Availability:
Out of Stock
  Price: Rs. 65 ( India )
  Price: Rs. 185 ( Outside India )

இசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான். சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களின் வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை; மேன்மை போற்றிப் புகழப்படவில்லை. அந்த வகையில், இசையுலக இளவரசராக விளங்கி, பல கோடி மனங்களில் வீற்றிருந்த அரிய சங்கீதக் கலைஞனான ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் வாழ்க்கை வரலாறும் பலர் அறியாததே! இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து, செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை ‘ஜி.என்.பி பாணி’ என்றே தனியாக அடையாளப்படுத்துவர். ஜி.என்.பி. படித்த படிப்பிற்கும் பழகிய சங்கீதத்திற்கும் இடைப்பட்ட வாழ்வின் போராட்ட மனதை விளக்குவதோடு, சங்கீதச் சக்கரவர்த்தியாக சரித்திரப் புகழ் மணக்க கோலோச்சிய ஜி.என்.பி_யின் வாழ்க்கையை முழுவதுமாக முறைப்படி பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர் லலிதா ராம். ஆதாரங்களின் செறிவும் அனுபவசாலிகளின் பகிர்வும் இந்நூலை உயர்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback