டிசம்பர் தர்பார்

டிசம்பர் தர்பார்

Category: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
Author: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Book Code: 141
Availability:
Out of Stock
  Price: Rs. 50 ( India )
  Price: Rs. 170 ( Outside India )

டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு இசை ஈயக் காத்திருப்பார்கள் கலைஞர்கள். வாத்தியங்களை வாத்தியக் கலைஞர்கள் கொஞ்ச ஆரம்பிப்பார்கள். அதுவும் கொஞ்சலில் மயங்கி, தவழ ஆரம்பிக்கும். தவழ்ந்துதவழ்ந்து இறுதியில், அதற்கு சொக்கி மயங்கிக்கிடப்பவர்களின் மடியில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். அவர்களை தனது இசைக் கரங்களால் ஆரத்தழுவி, நடை பழக எத்தனிக்கும் குழந்தையைப் போல மடியிலிருந்து இறங்க அடம்பிடிக்கும். இசையும் நகைச்சுவையும் இணைந்து பிறந்த இரட்டையர். நகைச்சுவையை இசை குழைத்து வழங்கும் பக்குவம் சென்ற நூற்றாண்டில் இருந்து தொடர்ந்துவரும் பாரம்பரியம். ஆனந்தம் பரமானந்தம் என்றால் அது அதிகம் கிடைப்பது வெளியில் நடக்க கால்கள் இடறும் பனிக்காலத்தில்தான். பனி என்றால் அது டிசம்பர். டிசம்பர் என்றால் இசை. அந்த டிசம்பரில் நடக்கும் இசை

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback