வினை தீர்க்கும் விநாயகர்

வினை தீர்க்கும் விநாயகர்

Category: ஆன்மிகம்
Author: மு. கோபி சரபோஜி
Book Code: 399
Availability:
Out of Stock
  Price: Rs. 60 ( India )
  Price: Rs. 160 ( Outside India )

கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால் உந்தனுக்கு உண்டே உயர்வு. திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் பலரும் கணபதியைக் கைதொழுகின்றனர். செந்தாமரைப் பூவில் வீற்றிருப்பவர்; அம்பு, அங்குசம், பாசம், வில் இவற்றைத் தாங்கிய நான்கு கரங்களைக் கொண்டவர்; சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்; ஓம்கார வடிவானவர்; முழுமுதற் கடவுள்; முன்வினை அழிப்பவர்... இப்படிப்பட்ட விநாயகப் பெருமானைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு இந்நூல் ஒரு வரப் பிரசாதம். விநாயகரின் அவதாரக் கதை முதல், அவரின் திருவிளையாடல் கதைகள் வரை பலவற்றையும் முழுதாக அறிந்துகொள்ள இந்நூல் துணைபுரியும். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விநாயகரை ஏன் முதலில் வணங்குகிறார்கள்; விநாயகரின் வலது தந்தம் உடைந்து காணப்படுவதன் காரணம் என்ன; நாம் முழுமுதற் கடவுள் என்று விநாயகரை அழைப்பது ஏன்; அவருடைய வாகனமாக எலி எப்படி அமைந்தது; அண்ட சராசரங்களும

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback