திருப்பாவை

திருப்பாவை

Category: ஆன்மிகம்
Author: ஸ்வாமி
Book Code: 415
Availability:
Out of Stock
  Price: Rs. 120 ( India )
  Price: Rs. 246 ( Outside India )

‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் பகவத்கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது, திருப்பாவை. முப்பது பாடல்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களும் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை சொல்லிக்கொண்டு பக்தர்கள் குழுவாகச் செல்வதைப் பார்க்கிறோம். நிறைய வீடுகளில் ஒலிநாடாக்களில் திருப்பாவை ஒலிப்பதையும் கேட்கிறோம். தமிழ் மறை எனப் போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாக உள்ள திருப்பாவை பாடல்கள் பக்தியின் உச்சத்தை எடுத்துக் காட்டுபவை. தமிழ் மொழியின் கவுரவச் சின்னமாகத் திகழும் பாக்கள் அவை. இன்றளவும் வெளி மாநிலத் தலங்களிலும், வெளி நாடுகளில் உள்ள ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்கு திருப்பாவை பாசுரங்களின் தெய்வீகமும் மொழி அழகுமே காரணம். ஆண்டாள் _ ஆன்மிக ஒளி பரப்பியவள்; தமிழக பெண் கவிஞர்களில் தலையாயவள். உலகெங்கும் பக்தியின் வீர்யத்தை, தமிழின் அழகைப் பறை சாற்றியவள் என்பதால்தான், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் ஆலய கோபுரம், தமிழகத்தின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ப

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback