உழைக்க உழைக்க சிரிப்பு வருது...

உழைக்க உழைக்க சிரிப்பு வருது...

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: கே.சத்தியநாராயணா
Book Code: 416
Availability:
Out of Stock
  Price: Rs. 75 ( India )
  Price: Rs. 157 ( Outside India )

‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதோ, 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பதோ நேற்றைய உலகத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் பச்சை பாப்பாகூட பயப்படாத காலம் இது. மனசில் படுகிற மாதிரி இனிதாக எடுத்துச் சொல்லித்தான் வேலை வாங்கியாக வேண்டிய கட்டாயம் இப்போது! தோளில் கைபோட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, நோகாமல் வேலை வாங்குகிற கலையில் வல்லவர்கள் யாரோ... அவர்களுக்கே அடுத்தடுத்த பதவி உயர்வுகள் காத்திருக்கின்றன. நிர்வாகத் திறமை என்பதே அத்தனை ஊழியர்களையும் ஒரு குடும்பமாக நினைக்கச் செய்து, கஷ்டமே தெரியாமல் வேலை வாங்குகிற சூட்சமம்தான் என்று அத்தனை பேரும் ஒப்புக்கொள்கிறார்கள். பெரிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களில், வேலை நேரத்துக்கு நடுநடுவே ஆட்டம், பாட்டம், ஜோக் என்று போட்டிகள் நடத்தி ஊழியர்களை உற்சாகப்படுத்துகிற வழக்கம் வந்துகொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய பதவியில் இருப்பவர்களே சிரிக்கப் பேசுகிற கலையில் வல்லவர்களாக இருந்துவிட்டால் அங்கே பளுவில்லாமல் பளிச்சென்று வேலைகள் முடிவதைப் பார்க்கமுடிகிறது. புதுப் புது சவால்களை எதிர்கொ

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback