மக்கள் நலன்... மருத்துவ அறிவு...

மக்கள் நலன்... மருத்துவ அறிவு...

‘நோயற்ற வாழ்வே...’ என்று முதல் வரியைச் சொன்னால், ‘குறையற்ற செல்வம்..!’ என்று பள்ளிக் குழந்தைகள் போல் கைகளை உயர்த்தியபடி எல்லோரும் உற்சாகமாகக் குரல் கொடுப்போம். ‘அப்படி நோயின்றி வாழும் வழிமுறைகள் யாருக்கேனும் தெரியுமா’ என்று கேட்டால், உயர்ந்த கைகள் அனைத்தும் தாழ்ந்துவிடும்! அப்படி தாழ்ந்து போகும் கைகளைத் தூக்கிவிடும் நோக்கில் நூலாசிரியர்கள் டாக்டர் டி.வி.தேவராஜன், டாக்டர் எல்.விஜயசுந்தரம் இருவரும் தங்கள் அனுபவத்தின் துணை கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கையை இலக்காகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு எதனால் நோய்கள் ஏற்படுகின்றன; என்னென்ன விதமான நோய்கள் ஏற்படுகின்றன; அவற்றைத் தடுப்பது எப்படி? குணப்படுத்துவது எப்படி? _ என, இந்த நூலில் நோய்களையும் மருத்துவ முறைகளையும் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன; எவ்வளவு கலோரி கொண்டிருக்கின்றன; சமச்சீர் உணவில் எதை, எவ்வளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ‘உணவும் உடல் நலமும்’ பகுதியில் விவரித்த

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback