96, தோப்புத் தெரு

96, தோப்புத் தெரு

Category: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
Author: இயக்குநர் கே.பாலசந்தர்
Book Code: 317
Availability:
Out of Stock
  Price: Rs. 50 ( India )
  Price: Rs. 200 ( Outside India )

நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கே.பாலசந்தர், நாடக உலகுக்குள் புயலாகப் பிரவேசித்தார். மேடையில் புதுமைகள் புகுத்தினார். கை தேர்ந்த சிற்பியாக பாத்திரங்களைச் செதுக்கி, பல கலைஞர்களை அதில் வாழ வைத்தார். சர்வர் சுந்தரம் நமக்குக் கிடைத்தார். மேஜர் சந்திரகாந்த் அறிமுகமானார். இன்னும் பல கே.பி. நாடகங்கள் கிடைத்தன. பார்த்தவர்கள் சிலிர்த்து, பிரமித்தார்கள். அது ஒரு பொற்காலம்! திரையுலகம் கே.பி.யை அழைத்துக்கொண்டது. பின்னர் சின்னத் திரையும் அவரைத் தனதாக்கிக் கொண்டது. நேரமின்மை காரணமாக நாடகத்தை விட்டு அவர் விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது _ தற்காலிகமாகத்தான்! ஒரு காலகட்டத்தில் கே.பி., நாடகங்கள் எழுதி, இயக்கவில்லையே தவிர, மற்றவர்கள் மேடையேற்றும் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து உற்சாகப்படுத்தினார். ஆக்கபூர்வமாக விமரிசனம் செய்தார். முன்வரிசையில் கே.பி. உட்கார்ந்திருக்கிறார் என்றால் மேடையில் நடிப்பவர்கள் தேர்வு எழுதுவதுபோல

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback