தாமிரபரணி கரையினிலே

தாமிரபரணி கரையினிலே

நதிகள் _ நாகரிகங்களின் தாய் என்பார்கள். நதிகளை மையமாக வைத்தே நாகரிகங்கள் தோன்றின. மனித வாழ்க்கைக்கு நதியின் நீர் அத்தியாவசியத் தேவை. நதிக்கரைகளில்தான் மனித இனத்தின் வாழ்க்கை ஆதாரங்கள் அதிகம் கிட்டின. பயிர் வளர்த்தும், அறுவடை செய்தும் மனிதன், தனக்கான உணவுக்கு வழிசெய்து கொண்டதற்கு முதற்காரணமாக அமைந்தவையும் நதிகளே! இப்படி நதிகளை ஒட்டியே வளர்ந்த மனிதன், தன் இனத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் நதிகளின் நினைவுகளுடனேயே பதிவு செய்திருக்கிறான். நம் நாட்டில் நதிகளை தெய்வங்களாகப் பார்ப்பார்கள். அவ்வாறே மதித்து வழிபாடும் செய்வார்கள். அவ்வகையில் கங்கையும் காவிரியும் மிகப் புனிதமான நதிகள் என்று போற்றப்படுவதை நாம் அறிவோம். தமிழக நதிகள் குறித்துப் பாடும் போது, காவிரி தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்பார்கள். தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கடைசி பெரிய ஆறு பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு. இந்த நதி வற்றாத ஜீவ நதி எனப் பெயர்பெற்றது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் பிறந்து, அந்த மாவட்டத்திலேயே வங்கக் கடலில் கலக்கிறது என்று பெருமையாகச் சொல்வார்கள். அ

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback