30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல்

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல்

Category: சமையல்
Author: சாந்தி விஜயகிருஷ்ணன்
Book Code: 257
Availability:
Out of Stock
  Price: Rs. 105 ( India )
  Price: Rs. 255 ( Outside India )

நகரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில், வீட்டில் வெரைட்டியான உணவுகளைச் சமைத்து உண்பது குறைந்து வருகிறது. அப்படியே சமைத்தாலும் பதமான சுவையில், கைப்பக்குவமான முறையில் சமைப்பது எல்லா வீடுகளிலும் நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. அப்படிச் சமைத்து உண்பவர்களைப் பார்த்து, சில நேரங்களில் பலருக்கு ஆற்றாமை வந்துவிடுகிறது. சில வேளைகளில் ஓட்டலுக்குச் சென்று விதவிதமான பதார்த்தங்களை ருசி பார்த்து அந்த ஆற்றாமையை போக்கிக் கொள்கிறார்கள். இருப்பினும், வீட்டிலேயே சமைத்து தேவையானபோதெல்லாம் ருசிக்கும் அளவுக்கு அவை நம்மை திருப்திப் படுத்துவதில்லை. இத்தகைய சூழலில் இருப்பவர்கள் இனி ஒருபோதும் கவலைகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் விகடன் இதழ் 30 வகை சமையல் குறிப்புகளை வழங்கி சுவையான சமையலைக் கற்றுத் தருகிறது. சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன் கைப்பக்குவத்தில் அவள் விகடன் இதழ்களில் வெளிவந்த ரகளையான உணவு வகைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாக வெளிவந்துள்ளது. வண்ணப் படங்களுடன் நளபாகமான செய்முறைகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் இல்லத்தை கமகமக்க வைக்கும்... உங்கள் உறவுகளை ருசியான இன்பத்தில் ஆழ்த்தும்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback