Deliver to Tamilnadu

மலைவாழ் சித்தர்கள்

Author : எஸ்.ராஜகுமாரன் Book Code: 941
புத்தகத்தின் விலை
155

இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்!

New Releases

1