Deliver to Tamilnadu

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

Author : ம.செந்தமிழன் Book Code: 1001
புத்தகத்தின் விலை
250

நமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத்து செயற்பாடுகளும் அதிவேகமாக மாறிவிட்டன. நவீனம், புதுமை, ட்ரெண்ட் என்கிற பெயரில் மனிதனின் வாழ்க்கை ஓட்டங்கள் எங்கோ துரத்திச் செல்லப்பட்டிருப்பது உண்மை. வாழ்வியல் கூறுகளை விட்டுவிட்டோமே என்கிற கதறுதலின் விளிம்பில் நிற்கிறோம். சற்றே திரும்பிப் பார்ப்போம், திரும்பிச் செல்வோம் நம் உலகத்திற்கு. பல மைல் தூரங்களைக் கடந்து வந்துவிட்டோம். சரி... என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முன்பு, என்ன நடந்தது எனத் தெரிந்துகொண்டால் இழந்தவற்றை மீட்டுக்கொள்ளலாம். இன்று விவசாய நிலங்களின் பாதிப்பு, ஓசோன் ஓட்டை, உணவில் கலப்படம், மருந்தே உணவாகிய நிலை போன்ற அபாய கட்டத்துக்குள் நின்றுகொண்டு திண்டாடிக் கொண்டிருப்போர் ஒரு கூட்டத்தார். இந்த நிலையைக் கண்முன் நிறுத்தி விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறது இந்த நூல். சுய வரலாறு, சமூக வரலாறு, பூமியின் சரித்திரம், ஆதி கால தொடக்கங்களின் தோற்றங்களையும் வரலாற்றையும் புரிந்து கொள்ளாமல், எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது! `வாழ்வியலுக்கான ஒழுங்குமுறைகள் மிக மிக அவசியம். வாழ்வியலை ஒழுங்கு செய்யாமல், மனதுக்கு மருந்து தேடினால் ஒரு காலத்திலும் கண்டறிய முடியாது' போன்ற உண்மைகளையும் நவீனமயமாக்கலின் ரகசிய கூறுகளையும் இனிதே எடுத்துரைத்து புத்துணர்வூட்டியிருக்கிறார் ஆசிரியர் ம.செந்தமிழன். ஆனந்த விகடனில் `ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி' என்ற பெயரில் வெளிவந்த தொடர் இப்போது நூலாக்க வடிவில் உங்கள் கைகளில்... வாழ்வில் மறைந்த ஸ்வாரஸ்யங்களையும் இழந்த நலன்களையும் மீட்டெடுக்கும் வழியையும் அறிய புரட்டுங்கள்...

New Releases

1