Deliver to Tamilnadu

அன்பே தவம்

Book Code: 1057
புத்தகத்தின் விலை
280

‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.’ ‘அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆன்மிக நெறிகளும் அன்பைத்தான் முதற்பொருளாகக் கூறுகின்றன. எல்லா மதங்களின் கோட்பாடுகளும் அன்பை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டவையே. இன்றைய அதி அவசர உலகில் சக மனிதரிடம், உயிர்களிடம் அன்புகாட்டுவது என்பது அரிதாகிப்போய்விட்டது. ஆனால், உலகெங்கினும் பிற உயிரிடம் இரங்கும் அன்புள்ளம்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தனி மனிதராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ, மருத்துவர் களாகவோ, தொண்டு செய்பவர்களாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குன்றக்குடி ஆதீனம் பல்லாண்டுகளாக கல்வி உள்ளிட்ட பல அறப்பணிகளைச் செய்து வருகிறது. ஆன்மிக வழியில் அன்பை வலியுறுத்தும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. ‘அன்புநிலையே வாழ்வின் உயர்நிலை’ என்பதை வலியுறுத்தும் இந்த நூல், அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அறநூலாகும்!

New Releases

1