Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.assettype.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X

Added to Cart

Cart subtotal:

Go to CartContinue Shopping

விகடன் இயர் புக் 2023

Author : விகடன் பிரசுரம்

Print book

350

Out of Stock

You can get this ebook instantly on our apps once you have made a payment.

Description

ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 11-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2023 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ பொது அறிவுத் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்தாகும். அந்த வரிசையில், இந்த ஆண்டும் அறிவை மெருகேற்றும் தகவல்களின் தொகுப்பாக விகடன் இயர்புக்-2023 தயாரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர், உலகை உலுக்கிய சம்பவங்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், ஆஸ்கர் விருதுகள் விவரம், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், இந்தியா பட்ஜெட்-2022, இந்திய-தமிழக முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... என அரிய செய்திகளின் தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது. மேலும், நோபல் பரிசுகள்-2022 பற்றிய சிறப்புக் கட்டுரைகள், இந்திய அரசு வழங்கும் அனைத்துத்துறை விருதுகள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, யூ.பி.எஸ்.சி தேர்வு வினா-விடை, குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு-2022 என போட்டித் தேர்வர்களுக்குத் துணைபுரியும் அனைத்துத் தகவல்களும் கொண்ட அற்புதப் படைப்பாக விகடன் இயர்புக்-2023 அமைந்துள்ளது. இது உங்கள் அறிவுப் பயணத்தின் கலங்கரை விளக்கம். படித்தறிந்து உங்கள் அறிவுப் பார்வையை விசாலமாக்குங்கள். விகடன் இயர் புக்-2023 பற்றிய உங்கள் கருத்துகளை ‘books@vikatan.com’ என்ற மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Read More

Product details

Generic Name : Book

Book code : 1102

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN : 978-93-94265-11-0

Country of Origin : India

Contact us : books@vikatan.com

Out of Stock

M.R.P: .00

You can get this ebook instantly on our apps once you have made a payment.