Deliver to Tamilnadu

கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்

Author : விகடன் பிரசுரம் Book Code: 1109
புத்தகத்தின் விலை
900

கலைஞர் கருணாநிதி இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல், மையம் கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், இந்திய அரசியலில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல; அது சரித்திரம். அதைப் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. திரைத்துறையில் வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனவும் அரசியலில் பேச்சாளர், களச்செயற்பாட்டாளர், கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனவும்... பத்திரிகை, இலக்கியம் என தான் தொட்ட துறைகளிலெல்லாம் துலங்கியவர், அவற்றில் தனித்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. தேர்தல் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் ஒரே நிலையில் இருந்து, தமிழக அரசியல் லகானைத் தன் கையில் வைத்திருந்து செயலாற்றியவர் அவர். தான் ஒரு பத்திரிகையாளர் என்பதால், பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாகத் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில் விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதற்கு இந்த நூல் எடுத்துக்காட்டு. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்த நூலில்! கலைஞர் எனும் சாதனையாளர், விகடனுடன் பயணித்ததைப் பற்றி இனி பார்க்கலாம்.

New Releases

1