Deliver to Tamilnadu

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)

Author : பாக்கியம் ராமசாமி Book Code: 379
புத்தகத்தின் விலை
70

நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி சூத்திரம், இயல்பிலேயே கைவரப் பெற்றவர் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி. இவருடைய கட்டுரைகளில் நகைச்சுவை இழையோடும். உண்மைச் சம்பவங்களோடு புனைந்த இந்த நகைச்சுவைக் கட்டுரைகள், படிப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். நகைச்சுவையை வலுவில் திணிக்காமல், சாதாரண நிகழ்ச்சிகளையே தனது எழுத்தாற்றல் மூலம் சித்திரித்திருப்பது இந்த நூலின் தனித்தன்மை. 'ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். உளுத்தம் பருப்பு கால் கிலோ பத்து ரூபாய். வெந்தயம் ஐந்து ரூபாய். சட்னி சாம்பார் பத்து ரூபாய். செய்கூலி, பாத்திர வாடகை, எரிவாயு, சப்ளையர் கூலி பத்து ரூபாய்... ஆக, 55 ரூபாய். இந்த 55 ரூபாய்க்கு அறுபது இட்லி செய்ய முடியும். சேதாரம் 5 இட்லி தள்ளினாலும் 55 ரூபாய்க்கு 55 இட்லி தேறும். ஆக, ஒரு இட்லியின் அடக்க விலை, ஒரு ரூபாய். இத

New Releases

1