Deliver to Tamilnadu

கண்ணீரால் காப்போம்

Author : பிரபஞ்சன் Book Code: 1043
புத்தகத்தின் விலை
215

நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும், காதலையும், கம்பீரத்தையும், ராஜ்யங்களின் வளங்களையும், வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த காலத்தில், வரலாற்று நாவலுக்கான கோட்பாட்டை வரையறுத்தது பிரபஞ்சனின் எழுத்துகள். வரலாற்றையும், புனைவையும் கலந்து எப்படி புதிய ஒரு வரலாற்றை சுவைபடக் கூறுவது என்பது பிரபஞ்சனுக்கு கைவந்த கலை. வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற நாவல்கள் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். ஏக இந்தியாவை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி அடிமைப்படுத்தி ஆண்டபோது, சின்னஞ்சிறு பிரதேசங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், சந்திரநாகூர் ஆகியவற்றை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தன்வசம் வைத்து ஆட்சி செலுத்தியது. அடிமைப்படுத்தி ஆள்வதில், ஆங்கிலேயர்களை மிஞ்சக்கூடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீட்க பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்களை விரட்ட விடுதலை இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. தன்னலமற்ற தியாகிகள் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். சிலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி விடுதலை வேள்வியை வளர்த்தார்கள். இவ்வாறாக புதுச்சேரி மண் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பல்வேறு தியாகங்களை சுமந்தது. புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட வ.சுப்பையா உள்ளிட்ட தியாகசீலர்களின் அறவாழ்வை இந்த நாவலில் எழுதி, இப்படிப் பட்ட மாமனிதர்களின் தியாகங்களை நமக்கு நினைவூட்டுகிறார் பிரபஞ்சன். இந்நாவல் தொடராக வெளிவந்து பின்னர் நூலாக வெளியானது. இந்நாவலின் தேவை கருதி, விகடன் பிரசுரம் இதனை மறுபதிப்பு செய்வதில் பெருமை கொள்கிறது. வாருங்கள் வாசிக்கத் தொடங்குவோம்.

New Releases

1