Deliver to Tamilnadu

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

Author : டாக்டர் மைக்கேல் செயராசு Book Code: 1076
புத்தகத்தின் விலை
220

சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சு முறிக்கும் சிகிச்சை வரை, பாட்டிகளிடமும் உள்ளூர் வைத்தியரிடமும் சென்றனர் நம் முன்னோர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போதுள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச்செடிகளின் அருமையை அறியாததால் அவற்றை உதாசினப்படுத்தி விட்டு, உடல் நலம் கெட்டால் மாத்திரைகளை விழுங்கி, அதனால் ஏற்படும் பக்க விளைவுக்கும் ஒரு மாத்திரை என மாத்திரைகளுக்கும் ஊசிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கிறது நம் ஆரோக்கியம். ஒரு மூலிகையால் பல நோய்களைக் குணமாக்கினார்கள் நம் முன்னோர். அந்த மகா மருந்து, நோயைக் குணமாக்கியதோடு அல்லாமல் அந்த நோய் மீண்டும் நம்மைத் தாக்காமல் தடுத்தாட்கொண்டது! நம்மைச் சுற்றியுள்ள செடி கொடிகளின் மருத்துவக் குணங்களை விளக்கி பசுமை விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நீரிழிவை நீக்கும் விளா.. வாத நோயைத் தீர்க்கும் நொச்சி.. காமாலையை விரட்டும் கீழாநெல்லி... என ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் உள்ள மருத்துவ மகத்துவத்தை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். வந்த நோயை விரட்டவும், இனி நோய் வராமல் தடுக்கவும் வழிகாட்டும் இந்த நூல் உங்கள் ஆரோக்கியத்தின் அரண்!

New Releases

1