Author : கொத்தமங்கலம் சுப்பு
Print book
₹55
காந்தியை தேசப்பிதாவாக, நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்டவராக மட்டுமே அறிந்திருக்கிறோம். அவரது இன்னொரு பக்கத்தை, குழந்தைத்தனமான குணத்தை, பல நல்ல கொள்கைகளைக் கற்றுத் தரும் குருவாக அவர் வாழ்ந்த வாழ்க்கையை நம்மில் பலர் அறிய வாய்ப்பில்லாமலே இருந்திருக்கிறது. குறிப்பாக இந்தக் காலத்துக் குழந்தைகள் காந்தியின் அன்பை, நகைச்சுவையை, விடாப்பிடியான வேகத்தை, பண்பை, எங்கே இருந்தாலும் அங்கே தன் முத்திரை பதிக்கும் வித்தையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதையெல்லாம் குட்டிக் குட்டிக் கதைகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் மனதில் பசுமரத்து ஆணியாக சில நல்ல குணங்கள் நுழைந்து கொள்ளும். இளகிய மண்ணாக இருக்கும் அவர்களின் இதயத்தில் காந்தியின் வாழ்க்கையைப் பதிவு செய்வது இந்தியா முழுக்க மகாத்மாக்களை விதைக்கும் வாய்ப்பாகும். அம்மாவின் கதை கேட்டு முத்து எவ்வாறு நற்குணங்களைக் கற்றுத் தேர்கிறான் என்பதை அழகான, அன்பான, எளிய வார்த்தைகளில் விளக்கி இருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. வெறும் கதைகளாக மட்டுமில்லாமல் காந்தியின் வாழ்க்கையினூடே இந்திய சுதந்திர வரலாற்றையும் இணைத்துச் சொல்லி இருப்பது அவரது சாமர்
Read More
Generic Name : Book
Book code : 171
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-89936-19-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00